top of page
Search

நமது வாழ்வின் மிக முக்கியமான உடல் இயக்கமான தூக்கம் பற்றி நாம் இப்போது பார்ப்போம்

தூக்கம் என்றால் என்ன ?


தூக்கத்தின் போது என்ன நடக்கிறது ?


தூக்கம் பற்றி நமக்கு என்ன தெரியும் ?


தூக்கம் எவ்வளவு அவசியம் ?


அதன் முக்கிய அம்சங்கள் பற்றியும் இப்போது நாம் தெரிந்து கொள்வோம் . தூக்கம் என்பது உடல் மற்றும் மனதிற்கான ஓய்வு காலம் ஆகும் . தூக்கத்தின் போது நமது விருப்பமும் உணர்வும் பகுதியாக குறையும். மேலும் உடல் செயல்பாடுகள் ஓரளவு குறையும். தூக்கம் என்பது இயற்கையாகவே நடக்கும் ஒரு நிகழ்வு ஆகையால் அச்சமயத்தில் நமது உணர்ச்சி செயல்பாடுகள் குறைக்கப்பட்டு தசை செயல்பாடுகள் குறையும். மேலும் சுற்றுப்புற தொடர்புகளும் குறையும்.


ஆரோக்கியமான தூக்கம்:


ஆரோக்கியமான தூக்கம் என்பது ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் வரை உறங்க வேண்டும்.

உடலுக்கும் மனதிற்கும் ஓய்வு அளிக்கிறது என்பதோடு அவர் மறுநாள் காலை புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது.

ஒருவர் இரவு தூக்கத்திற்கு பின் காலையில் புத்தணர்வோடு இருந்தால் அவருக்கு நல்ல தூக்கம் கிடைத்திருக்கிறது என்று அர்த்தம்.


ஆரோக்கியமற்ற துக்கம் :


தூக்க தொந்தரவுகளில் மிக முக்கியமானது தூக்கமின்மை.

அதாவது போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது மிகைவிழிப்பு என்றும் கூறலாம்.தூக்கமின்மை அல்லது மிகை விழிப்பு பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை உறங்க வேண்டும். அதுதான் அவரின் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வை கொடுக்கும். பொதுவான தூக்கமின்மை பிரச்சனையை குறிப்பிட வழங்கும் பொதுச்சொல் மிகைவிழிப்பு.


இன்சோம்னியா


தூக்கம் வருவதே சிலருக்கு சிரமமாக இருக்கும்.வேறு சிலருக்கு அதிகாலையில் தூக்கம் கலைந்து விடும். அதன் பிறகு அவர்களுக்கு மீண்டும் தூக்கம் வராது.சிலர் இரவு முழுவதும் இடையிடையே தூக்கத்தில் விழித்துக் கொள்வார்கள். மிகை விழிப்பு என்பது பொதுவாக காணப்படும் புகார். சரியான தூக்கம் இல்லை என்றால்.


  • களைப்பு

  • பகல் நேரத்தில் மந்தமாக இருக்கும்.

  • மனதை குவிக்க இயலாமை

  • சட்டென்று எரிச்சலோடு கோபப்படும் போக்கு..

  • தெளிவாக சிந்திக்க இயலாமை.


இதெல்லாம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.


இது எதனால் ஏற்படுகிறது.


தூக்கமின்மை ஏற்பட பொதுவான சில காரணங்கள்.மருத்துவ ரீதியான பிரச்சனைகள் குறிப்பாக வலி, மூச்சு விடுவதில் சிரமம், அல்லது தொடர்ந்து சிறுநீரை வெளியேறச் செய்யும் அல்லது சிறுநீர் தொற்று,மனச்சோர்வு, பதற்றம் , மதுப்பழக்கம் தூக்க மாத்திரைகளை அளவுக்கு இல்லாமல் பயன்படுத்துதல்.


தூக்கமின்மை என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து குணப்படுத்தி விட்டால் அவர்களால் இயல்பாக உறங்க முடியும். உறக்கம் வராமல் இருக்க அடியோட்டமாக வேறு ஏதாவது நோய்கள் இருந்தால் அது முதலில் குணப்படுத்தப்பட வேண்டும்.


நன்றாக உறங்குவதற்கான சில ஆலோசனைகள் கீழே


  • தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வது, சீரான உறக்க முறையை பின்பற்ற உதவும்.

  • அதேபோல் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் கண் விழிக்க வேண்டும்.சிரமமாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் எழ பழகிக் கொள்ள வேண்டும்.

  • உறங்கச் செல்வதற்கு முன் மூச்சுப் பயிற்சியை செய்யலாம். மாலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விட்டு பகலில் செய்யலாம்.

  • பகலில் குட்டி தூக்கம் போடுவதை தவிர்க்க வேண்டும்.

  • உறக்கம் வருவதற்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

  • படுக்கை அறை இருட்டாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் .

  • தூக்கத்தை வரவழைக்க தூக்க மாத்திரைகள் அல்லது மதுவை பயன்படுத்த வேண்டாம்.

  • படுக்க செல்வதற்கு முன் புகை பிடிக்க கூடாது.

  • இருமல் உங்களுக்கு தூக்கம் வராமல் விழித்திருக்க செய்யும்.

  • படுக்க போவதற்கு முன் சிறுநீர் கழித்து விடுங்கள்.

  • மாலை நேரத்தில் தேநீர் அல்லது காபி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

  • தூக்கம் கலைத்து விடும்.


இறுதியாக...


தூக்கம் வரவில்லையே என்று கவலைப்படுவது உங்களுக்கு மேலும் தூக்கம் வராமல் இருக்க செய்யும். அதனால் தூக்கம் வராவிட்டால் படுக்கையிலேயே இருக்காமல் சிறிது எழுந்து ஏதாவது புத்தகம் படிப்பது, 15- 20 நிமிடங்கள் மெதுவாக நடந்து நடைப்பயிற்சி செய்து இளைப்பாறுவது தூக்கம் வர உதவி செய்யும்.



12 views0 comments

Recent Posts

See All
bottom of page