மன நலம் பற்றிய புரிதலும் அறிவும் நமக்கு இன்னும் அதிகம் வேண்டும்.
- Ennrich psychological support services
- Oct 20, 2020
- 1 min read
Updated: Oct 22, 2020
வணக்கம்..
மன நலம் பற்றிய புரிதலும் அறிவும் நமக்கு இன்னும் அதிகம் வேண்டும்.
அப்படி புரிதல் அறிதல் இருந்தாலும் தேவையான முறையில் அதில் அக்கறை செலுத்துவது குறைவுதான்.
தேவையான சிகிச்சையை எடுத்துக் கொள்வதிலும் ஏகப்பட்ட தயக்கம் ,பயம், அலட்சியம்...
இதே மனப்பான்மை தான் கோவிட் 19 க்கும் .
என்னதான் எவ்வளவுதான் தெரிந்து கொண்டாலும் புரிந்து கொண்டாலும் ஒருவித அலட்சியப் போக்கு தான் நம் மக்களிடையே இருக்கிறது...
எத்தனை டாக்டர்கள் எச்சரித்த போதும் விவரம் தெரிந்தவர்களும் அலட்சியப்படுத்தும் போது தான் நமக்கு மனது வலிக்கிறது ..
மனநலம் உடல்நலம் இரண்டும் முக்கியம்.
covid-19 லிருந்து நம்மை சரியான முறையில் காத்துக் கொள்வது மிக அவசியம்.
ஜெ. சாதனா மனநல ஆலோசகர்

Comments