பெண்ணின் நலம் எல்லா காலத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலத்துறைகளில் பல்வேறு உச்சங்களைத் தொட்டு இருந்தாலும் தன்னலம்காக்கிறார்களா என்பது தான் கேள்வி. அவள் குழந்தையாய் பிறந்ததிலிருந்து வளர்ந்து யுவதியான வயதை அடைவதும் அதன் பிறகு திருமணம், இல்லற வாழ்க்கை, குடும்பம் ,குழந்தைகள் வளர்ப்பு , குடும்பத்தார் கவனிப்பு என்று இன்ன பிற விஷயங்கள் என்ற அக வாழ்க்கை மற்றும் வேலை, பணி மற்றும் சொந்த தொழில் என்ற அவளின் புற வாழ்க்கை .. போற்றுதலுக்குரியது... சிறு வயது முதலே எடுத்துக் கொண்ட முடிவுகள், உறுதிகள், பயிற்சிகள், தொடர் கவனிப்புகள், தொடர் முயற்சிகள்ஆகியவற்றால் அவர்கள் எளிதாக இல்லை என்றாலும் மிக கடினமான பாதைகளை கடந்து தங்களின் இலக்கைஅடைகிறார்கள் . அப்படி அடைந்த பின்னரும் அதில் அவர்கள் நிலையாக இருப்பதற்கு தொடர்ந்து பணிபுரிந்து கொண்டே பணி நிமித்தமாக பல பயிற்சிகள் பெற்று மிகப்பெரிய பதவிகளை தக்க வைத்துக் கொள்கிறார்கள். கூடவே குடும்ப பொறுப்புகளையும் கவனித்துக் கொள்கிறார்கள் . அப்படிப்பட்ட இடையறா வாழ்க்கை ஓட்டத்தில் அவளுக்கு அவள் உடல் நலமும் மன நலமும் முக்கியம் என்பது நாம் ஒவ்வொரும் அறிந்தது தான்.. புரிந்தது தான். இந்தபுரிதலில் சில நேரங்களில் சில இடங்களில் சில தவறுகள் நடந்து விடுகிறது. தெரிந்தே சில தவறுகள் நடக்கின்றன. தெரியாமலும் அறியாமலும் சில தவறுகள் நடக்கின்றன . குடும்பம் , வேலை மற்றும் மற்ற பொறுப்புகளாலும் எப்போதும் பணியாற்றிக் கொண்டே இருக்கும் பெண்கள் தங்களை கவனித்துக் கொள்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னதான் அவர்களுக்கு ஆரோக்கியம் பற்றிய புரிதல் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் ஏகப்பட்ட சிக்கல்கள்அவர்களுக்கு இருக்கிறது . மேலும் சிலருக்கு சுய ஆரோக்கியம் - கவனிப்பு மறந்தே போய்விடுகிறது .. சுய கவனிப்பு இல்லாத போது என்ன நடக்கிறது - உடல்நலம் பாதிக்கப்படுகிறது . செய்யும் வேலைகளில் தவறுகள் நிகழ்கிறது. குடும்ப உறவுகள் மற்றும் அலுவலக உறவுகளின் மேம்பாடு குறைகிறது,பிள்ளைகள் வளர்ப்பு , பெரியோர்கள் கவனிப்பு, பண பரிவர்த்தனைகள் குடும்பத்திலும் தொழில் மற்றும் வேலையிலும்முக்கிய முடிவுகள் எடுப்பது என்று ஒவ்வொரு விஷயத்திலும் சிறு சிறு குறைகள் ஏற்படும். இது மறுபடியும் அவர்களுக்கு மனஉளைச்சலை தரும். மன உளைச்சல் தொடர்ந்து இருந்தால் அதுவே மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால்மறுபடியும் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகிறது .. இது ஒரு வகையான தொடர் நிகழ்வாகும். நாம் அவற்றை எப்படி நிர்வகிக்கலாம் என்று பார்ப்போம். பெண்களின் சுயநலம் அதாவது சுய ஆரோக்கியம்..- சுய கவனிப்பு
சுய கவனிப்பு ஒவ்வொருவருக்கும் முக்கியம். ஆரோக்கியம் என்ற சொல்லின் விரிவான பொருள் உடல் நலத்தையும் மனநலத்தையும் உள்ளடக்குகிறது.
நம்மை நாமே எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் . அதுவும் குறிப்பாக பெண்கள் ... இதன் முக்கிய ஐந்து கோட்பாடுகள் என்னவென்றால் 1. எல்லைகள் நமக்கு நாமே எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் மற்ற விஷயங்களில் நம்முடைய எல்லைகள் என்ன என்பதைவகுக்க வேண்டும். இது நமக்கு தேவையற்ற நேர மற்றும் ஆற்றல் விரயத்தை தவிர்க்கும். 2 உணர்ச்சி வசப்பட்டாமல் ஆரோக்கியமாக செயல்படுத்துதல்.. எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக உணர்வு பூர்வமாக யோசிக்காமல் அதில் உள்ள முக்கிய கருத்தை புரிந்து கொண்டுஆரோக்கியமாக செயலாற்ற வேண்டும். 3. உங்கள் உடல் சொல்வதை கேட்க வேண்டும். பசி தூக்கம் தாகம் போல மற்ற உடல் நலம் சார்ந்த அறிகுறிகளையும் நாம் உணர்ந்து புரிந்துக் கொள்ள வேண்டும். அது உடல்நலம் சம்பந்தப்பட்டதாகட்டும்மனநல சம்பந்தப்பட்டதாக இருக்கட்டும். அதை கவனிக்க வேண்டும். 4.எது உங்களை மீட்டெடுக்கும் விஷயம்:
மிக கடினமான இறுக்கமான சூழ்நிலைகளில் எது உங்களுக்கு இலகுவாக்க உதவுகிறதோ அதை பின்பற்ற வேண்டும். 5. சந்தோஷம் சொந்தமானது
தங்களுக்கும் சந்தோஷம் சொந்தமானது, உரிமையானது என்ற மனநிலையை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் தொடர்ந்து சுய கவனிப்பில் ஈடுபடுவது கவலை மற்றும் மனசோர்வை குறைக்கும் மன அழுத்தத்தை குறைக்கும், மகிழ்ச்சியை அதிகரிக்கும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்க ப்பட்டுள்ளது.. மேலும் சுய கவனிப்பு உறவுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும், அவசியமான புதிய பழக்கவழக்கங்களை கற்றுக் கொள்ளவும் மற்றும் பின்னடைவிலிருந்து இருந்து முன்னேறவும் உதவும். எப்படி நம்மை நாமே கவனித்துக் கொள்வது.? கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் நமக்கு உதவிகரமாக இருக்கும். 1 உணர்வு சுயகவனிப்பு.
உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் தொடர்பு படுத்தவும் நிர்வகிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் இதற்காகபயிற்சியாளரை சந்திப்பது. நாட்குறிப்பில் எழுதுவது, சில வகையான உளவியல் பயிற்சிகள் எடுத்துக் கொள்ளலாம், 2 உடல் நல கவனிப்பு : உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த செய்யப்பட வேண்டியவை .. உதாரணமாக உணவு இடைவேளையில் சிறிது நடை பயிற்சி மேற்கொள்வது. 8 மணி நேர தூக்கம் போதிய தண்ணீர் அருந்துவது .. இது மாதிரி சிறு சிறு உடல் நல கவனிப்புகள் பெரிய பிரச்சனைகள் வராமல் நம்மை பாதுகாக்கும். 3 மனநல சுய கவனிப்பு
மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்யும் செயல்கள் அதாவது புத்தகங்கள் படிப்பது, சுருக்கெழுத்துப்போட்டியில் பங்கு கொள்வது, சதுரங்கம் விளையாடுவது இன்ன பிற விஷயங்கள் நம் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
டென்னிஸ் விளையாடுவது, நடனம் ஆடுவது, பாடுவது , ஓவியம் வரைவது கவிதை எழுதுவது, மலை ஏற்றம், நண்பர்களுடன்பேசுவது , பிடித்த புத்தகங்கள் படிப்பது என்று உங்களுக்கும் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் ஒரு புத்துணர்ச்சி மற்றும்நம்பிக்கை தருகிறதோ அதை நீங்கள் தொடர்ந்து செய்யலாம். 4 சமூக நல சுய கவனிப்பு
நம் குடும்ப உறவுகள் நட்புகள் சமூக உறவுகள் மேம்பட செய்யும் செயல்கள். முக்கிய விழாக்களுக்கு செல்வது , குடும்பத்தாரோடு அமர்ந்து உணவு உண்பது, ஃபோன் மூலம் பெற்றோர் மட்டும் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதுகுடும்பத்தாரோடு சுற்றுலா செல்வது இன்ன பிற விஷயங்கள் சமூகத்தோடு நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தும். 5. ஆன்மீக சுய கவனிப்பு
ஆன்மீக சுய கவனிப்பு என்பது நம் ஆத்மாவோடு தொடர்புடையது. நம் ஆன்ம உணர்வு மேம்பட வலுப்பட செய்யும் செயல்கள்எனவும் சொல்லலாம். தியானம் ,யோகா ,விருப்பமான முக்கிய ஆன்மீக ஸ்தலங்களுக்கு செல்வது ,இயற்கை எழில் சூழும்இடங்களுக்கு செல்வது ஆகும். மேலும் தன்னால் முடிந்த உதவிகள் மற்றவர்களுக்கு செய்தல் . உதாரணமாக தன்னார்வதொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் தேவைப்படுபவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யலாம். அதன் மூலம் இந்தசமூகத்திற்கும் பங்களிப்பு கொடுக்க முடியும். இன்றைக்கு ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எல்லா விதத்திலும் தன்னுடைய பங்களிப்பைகொடுத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அப்படி அவள் செய்யும் பொழுது தன்னை கவனிக்க மறந்து விடுகிறாள். அந்தமாதிரி சூழ்நிலைகளில் அவள் எப்படி தன்னை மீட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கவனமாக ஒரு பயிற்சியாகசெய்தாலே பிற்காலத்தில் வரும் உடல் மனநல பிரச்சனைகள் வராமலேயே தடுத்து விடலாம். சுய கவனிப்பு செய்ய முடியாத நேரங்களில் நாம் மற்றவர்களை அதற்காக குறை கூறினாலும் எத்தனையோ காரணங்கள்அதற்கு இருந்தாலும் நம்மை நாம் கவனித்துக் கொள்வது நம் கைகளில் தான் இருக்கிறது . அது நம்முடைய பொறுப்பு என்பதை உணர்ந்து சுய கவனிப்பை தினமும் பின்பற்றுவது, தொடர் முயற்சி , கவனமாக இருத்தல்ஆகிய சில வழிகள் மூலம் நாம் நம்மை கவனித்துக் கொள்வதை எளிதாக்க முடியும். நாம் நம் வாழ்க்கையின் அர்த்தம் மற்றும் நோக்கம் ஆகியவற்றை மனதில் அடிப்படையாகக் கொண்டு ஒரு இலக்கை நோக்கிநகரும் பொழுது சுய கவனிப்பும் முக்கியம். தினமும் அதை பயிற்சி படுத்தினால் வானமும் கை வசப்படும்.. இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்..
ஜெ. சாதனா உளவியல் ஆலோசகர் & பயிற்சியாளர் நிறுவனர் என்ரிச் சைக்காலஜிக்கல் சப்போர்ட் சர்வீசஸ்
சென்னை
Article Published in Vikatakavi-
Comments